Saturday, 7 October 2017

கோபுர கட்டடக்கலை

              

               கோபுர கட்டடக்கலை 

          தமிழகத்தில்   மிக பழமையான  கோபுரங்கள் 

https://g.co/kgs/3ZSQMrm

                              தமிழகத்தில்   இன்று  திகழும் கட்டுமான  கோயில்களின்   வரிசையில்  மிகப்  பழமையான  கோபுரவாயிலுடைய  திருக்கோயிலாகத்  திகழ்வது   காஞ்சிபுரம்   கைலாசநாதர்  திருக்கோயிலாகும்.    அது  போன்றே     மாமல்லபுரம்  கடற்கரைக்   கோயிலுமாகும் . இவ்விரு  கோயில்களும்
 இராஜசிம்மன்     எனும்   பல்லவப்  பேரரசனால்  கட்டப்பெற்றவையாகும்.   மாமல்லபுரம்  கடற்கரை கோயிலின் மேற்குக்  கோபுரம்அழிந்துவிட்டாலும்
 கிழக்குப்புறம்   கடலை  ஒட்டிய  மதிலின்  வாயிலில்  சிறிய தோரணவாயில்   போன்ற  கோபுர அமைப்பு காணப்படுகிறது .காஞ்சிபுரம்  கைலாசநாதர்   கோயில் கோபுரம் ஒரே  நிலையுடன் மிக சிறிய  கோபுரமாக  காணப்படுகிறது .அதிஷ்டானத்தில்  தொடங்கி  சிகரம்  வரை கோபுரத்திற்கான  அங்கங்கள்   இருப்பினும்  சாலை,  கூடு  போன்ற  உறுப்புகள்   இல்லை.
 
                          பல்லவர்  காலத்தில்  குறிப்பாக  இராஜசிம்ம பல்லவன்  காலத்தில்  வளர்ச்சி  எய்தத்  தொடங்கிய  கோபுரக் கட்டட கலை,  சோழப்பேரரசர்கள்  காலத்தில்  கோயிற்கட்டடக்கலையில்  ஒரு  முக்கிய  இடத்தை  பெறலாயிற்று.  ஆதித்தன்  பராந்தகன்  போன்ற  பேரரசர்கள்   காலத்தில் எடுக்கப்பெற்ற   கோபுரங்களைப்   பின்னாளில்  பலர்  புதுப்பித்ததால்  அவர்கள் படைப்புகளின்  முழு எழிலையும்  குறைவு படாமல்  பார்க்க  இயலவில்லை.   திருவாரூர் திருக்கோயிலின்   புற்றிடங்கொண்ட  ஈசனின்  திருக்கோயில்  முன்பு  திகழும் சிறிய  கோபுரம்  முற்காலச்  சோழர்படைப்புக்கு  சிறந்த சான்றாகும் .   இருப்பினும்  அதன்  மேல் தளங்கள்  பலமுறை  திருப்பணிகளுக்கு  உள்ளானதால்  பழமையான   வடிவம் மாறிவிட்டது. மூன்று  நிலைகளோடு திகழ்ந்த  முற்காலச்  சோழர்களின்  கோபுரங்கள் மாமன்னன் இராஜராஜன்  காலத்தில்தான்  புதிய வளர்ச்சி   நிலையை  அடைந்தது . தஞ்சைப்  பெருங்கோயிலின்   வாயில்களான
கேரளாந்தகன்  திருவாயில் , இராஜராஜன்  திருவாயில்   எனும்  இரண்டு கோபுரங்கள்தான்  தமிழக  கோபுரக்கலை   வரலாற்றில்  ஒரு  புதிய பரிணாம  வளர்ச்சியைத்  தோற்றுவித்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்பு  தமிழகத்தில் திகழ்ந்த   மிகப் பெரிய    கோபுரங்கள் இவைதான்  என்பது  குறிப்பிடத்தக்கது .

https://g.co/kgs/3ZSQMrm




          கோபுரத்தின்   உட்பகுதிகள் 

                   பிரதான  கோபுர  வாயில் மகாதுவாரம்   என்றழைக்கப்படும் . இம்மகாதுவாரம்   வெளிவாயில்லியிருந்து   உள்வாயில்  வரை  உள்ள இடைப்பட்ட  பகுதில்  நிலைக்கால்கள்  தவிரச்  சுவரிலேயே   பிதுக்கம்  பெற்ற  பத்தி தூண்கள்   கோபுரங்களில்  காணப்படும்  . இரண்டு நிலைவாயில்களுக்கு   இடையே  திண்ணை போன்ற   அமைப்புடன்  இரண்டடுக்கு   அறை    இருபுறங்களிலும்  காணப்படும். கீழ் அறையின்  அடித்தளம்  சற்று  உயர்ந்து  திண்ணையாக  விளங்குவதனை  அளிந்தம் என   நூல்கள் கூறுகின்றன.இத்திண்ணையிலிருந்துதான்  கோபுர மேற்தளங்களுக்கு    செல்லும்  படிக்கட்டுகள்  தொடங்கும் .
https://g.co/kgs/3ZSQMrm




















No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.